Friday, December 31, 2010
Thursday, December 30, 2010
கனவுகள் (Dreams)
கருவிழியில்
மறு விழியாய் ...
எண்ண ஓட்டத்தை
எதிர்காலத்தை நோக்கி ...
இழுத்து செல்பவன்
நிகழ் காலத்தை ...
நினைவு படுத்த
மறுக்கிறான்
மறு விழியாய் ...
எண்ண ஓட்டத்தை
எதிர்காலத்தை நோக்கி ...
இழுத்து செல்பவன்
நிகழ் காலத்தை ...
நினைவு படுத்த
மறுக்கிறான்
Wednesday, December 29, 2010
Tuesday, December 28, 2010
மெழுகுவர்த்தி
இதுவும் வரதட்சணை கொடுமை தானோ????
தன்னை கொளுத்தினாலும்
உன் வாழ்க்கை இருட்டாகி விட
கூடாதென்று கவலை படுகிறது !!!
கண்ணாடி
இவனின் அழகை கண்டு
பலருக்கும் பொறாமை,
இவனை கடந்து செல்வோர்
ஒரு முறையேனும் இவன் அருகில் நின்று தன்னை ஒப்பிட்டு பார்த்து கொள்கின்றனர்
Monday, December 27, 2010
மூட நம்பிக்கை
மானத்தை மறைக்க
பட்டாம் பூச்சியை கொன்றவர்கள்,
மனத்தை நிறைக்க மூட நம்பிக்கையை
கொள்ளாமல் விட்டு விட்டார்கள்
"விதவையை பார்த்தவுடன் சகுனத் தடையாக நினைப்பவர்கள்"
Friday, April 2, 2010
நட்பின் பிரிவு
ஆட்டி வைத்த பாசம்
அழுது கொண்டு போகிறது,
ஊட்டிய பாசம்
கழுவி கொண்டு போகிறது,
பார்த்து பழகிய கண்கள்
வெளியேற்றம் செய்கிறது கண்ணீரை,
சிவந்து போனது கண்கள்
அழுது! அழுது!
சோர்ந்து போனது மனங்கள்
நினைத்து! நினைத்து!
ஏங்கி போனது நினைவுகள்,
எங்க வைத்து விட்டது காலங்கள்,
இனிமேல் எப்போது பார்ப்போம்
என்று . . . .
அழுது கொண்டு போகிறது,
ஊட்டிய பாசம்
கழுவி கொண்டு போகிறது,
பார்த்து பழகிய கண்கள்
வெளியேற்றம் செய்கிறது கண்ணீரை,
சிவந்து போனது கண்கள்
அழுது! அழுது!
சோர்ந்து போனது மனங்கள்
நினைத்து! நினைத்து!
ஏங்கி போனது நினைவுகள்,
எங்க வைத்து விட்டது காலங்கள்,
இனிமேல் எப்போது பார்ப்போம்
என்று . . . .
நட்பு
பழகுவதற்கு இனிமை,
பாசத்தில் புதுமை,
இதில் இல்லை வறுமை,
பிரிவில் எல்லோர் மனதிலும் வெறுமை,
இவையெல்லாம் நட்பின் சொந்தம் . . .
இரத்த பாசம் இல்லாத உறவு,
ஆனால் இரத்ததை கொடுக்கும் உறவு!
எதிர்பார்க்காமல் வருவது நட்பு,
எதிர்பார்த்தால் வருவது வெறுப்பு!
இரத்தம் சிந்தினால் அழுவது பல மனங்கள்,
குடும்பத்தை தவிர,
உண்மையாக அழுவது ஓரே ஒரு மனம்,
என் நண்பர்களின் மனம் . . .
பாசத்தில் புதுமை,
இதில் இல்லை வறுமை,
பிரிவில் எல்லோர் மனதிலும் வெறுமை,
இவையெல்லாம் நட்பின் சொந்தம் . . .
இரத்த பாசம் இல்லாத உறவு,
ஆனால் இரத்ததை கொடுக்கும் உறவு!
எதிர்பார்க்காமல் வருவது நட்பு,
எதிர்பார்த்தால் வருவது வெறுப்பு!
இரத்தம் சிந்தினால் அழுவது பல மனங்கள்,
குடும்பத்தை தவிர,
உண்மையாக அழுவது ஓரே ஒரு மனம்,
என் நண்பர்களின் மனம் . . .
Thursday, April 1, 2010
காதல் தோழி
வலிக்கும் போது வருடுவாள்
இதயத்தை ,
உருகும் போது துடைப்பாள்
கண்ணீரை ,
தள்ளாடும் போது ஊன்றுகோல்
அவள் ,
நட்புக்கு தோழியாக இருப்பாள் ,
மனதில் காதல் இல்லாமல்
இருந்திருந்தால். . . . . ,
நட்பு (அ) காதல்
நூறு கோடி இதயங்களில்
அமைதி புரட்சி
செய்தவன்
இவன் மலரும் சத்தம்
கேட்பதில்லை,
மலர்ந்த பிறகு
உதிரவும் இல்லை
Wednesday, March 31, 2010
முதியோர்
தொலைந்து போன
வாழ்க்கையை,
தேடிக்கொண்டிருக்கின்றனர்
துடிப்பான இளைஞர்கள்
நம்பிக்கை கோல்களுடன் . . .
"முதியோர் இல்லத்தில் இருக்கும் முதியோர்கள்"
நட்பின் சுகம்
காகித வார்த்தைகள்
படிக்க வேண்டியவை,
நட்பில் பேசிய வார்த்தைகள்
சுமக்க வேண்டியவை,
படித்தால் மறந்துவிடும்!
சுமந்தால் நிறைந்துவிடும்!!!
நம் மனது . . .
படிக்க வேண்டியவை,
நட்பில் பேசிய வார்த்தைகள்
சுமக்க வேண்டியவை,
படித்தால் மறந்துவிடும்!
சுமந்தால் நிறைந்துவிடும்!!!
நம் மனது . . .
Tuesday, March 30, 2010
Wednesday, March 24, 2010
மகிழ்ச்சியாய் இரு
முள்ளில் தான் வாழ்க்கை
ஆனாலும் சிரித்து
கொண்டிருக்கிறது "ரோஜா"
சிரிப்பே சிறந்த மருந்து!
மகிழ்ச்சியாய் இரு எப்போதும்!
ஆனாலும் சிரித்து
கொண்டிருக்கிறது "ரோஜா"
சிரிப்பே சிறந்த மருந்து!
மகிழ்ச்சியாய் இரு எப்போதும்!
மெழுகுவர்த்தி
தன்னை அழித்து,
தன்னுள் இருளை கொண்டு,
பிறருக்காக வாழும்
பெருந்தன்மையாளன்!
இவனுக்கு ஓர் நிமிட கண்ணீர் அஞ்சலி!
தன்னுள் இருளை கொண்டு,
பிறருக்காக வாழும்
பெருந்தன்மையாளன்!
இவனுக்கு ஓர் நிமிட கண்ணீர் அஞ்சலி!
புகழ்
மரணத்தின் வாயிலிலும்
மறையாத ஓர் ஒளி விளக்கு
இது குன்றின் மேலிட்ட
விளக்கு போல் பாரெங்கும்
பரவும் வல்லமை பெற்றது!
இது மனிதனின் கண்களையும்
மறைக்கும், அவனையும் அழிக்கும்! இதற்கு மாயங்காதோர் யாரும் இலர்!
மறையாத ஓர் ஒளி விளக்கு
இது குன்றின் மேலிட்ட
விளக்கு போல் பாரெங்கும்
பரவும் வல்லமை பெற்றது!
இது மனிதனின் கண்களையும்
மறைக்கும், அவனையும் அழிக்கும்! இதற்கு மாயங்காதோர் யாரும் இலர்!
Tuesday, March 23, 2010
வாழ்க்கை
வாழ்க்கை என்ற கடலில்,
முயற்சி என்ற படகில்,
தன்னம்பிக்கை என்ற துடுப்புடன்
நாம் பயணம் செய்கிறோம்!
கரை என்ற வெற்றியை அடைய
தன்னம்பிக்கை, முயற்சியுடன்
வாழ்க்கையை கடந்து செல்ல வேண்டும்
Sunday, March 21, 2010
வாழ்த்து
வாழ்க்கையில் முன்னேற
வார்த்தைகள் மட்டும் முக்கியமல்ல
வாழ்த்துகளுடன் சேர்ந்த
வார்த்தைகளின் வடிவம்,
இறைவனின் ஆசி!
Saturday, March 20, 2010
காதல்

வலிக்கும்
இதயத்தை
வலிக்காமல்
வருடிய மயிலிறகு....
Subscribe to:
Posts (Atom)