Friday, December 31, 2010

எழுதுகோல் அல்லது பேனா (PEN)




எனது
எண்ண ஓட்டத்தை
வெளிப்படுத்த
தனது
ரத்தத்தை தியாகம்
செய்கிறான்

கைபேசி (Cell Phone)


எனது விரல்கள்
விளையாட
அனுமதிக்கும்
அன்புக்காதலி

மதம்


கருவறையில்
போர்த்தியதை
கல்லறை வரையிலும்
கழற்ற மனமில்லை

Thursday, December 30, 2010

கனவுகள் (Dreams)

கருவிழியில்
மறு விழியாய் ...
எண்ண ஓட்டத்தை
எதிர்காலத்தை நோக்கி ...
இழுத்து செல்பவன்
நிகழ் காலத்தை ...
நினைவு படுத்த 
மறுக்கிறான்

Wednesday, December 29, 2010

தாஜ் மஹால்


பல வருடங்களாக
சுமந்து பெற்றெடுத்த குழந்தை
ஒரு ஆணையும் தாய்யாக்கிய
பெருமை காதலுக்கே உண்டு.

கையூட்டு(லஞ்சம்)


காந்தியால் பெற்ற சுதந்திரம்
காந்தியாலேய் பறிபோயிற்று

கருப்பு பணம்


ஆறு அடிக்கு சொந்தக்காரன்
அறுபது அடி தோண்டுகிறான்
என்னை புதைக்க

Tuesday, December 28, 2010

மெழுகுவர்த்தி


இதுவும் வரதட்சணை கொடுமை தானோ????

தன்னை கொளுத்தினாலும்
உன் வாழ்க்கை இருட்டாகி விட
கூடாதென்று கவலை படுகிறது !!!

கண்ணாடி


இவனின் அழகை கண்டு
பலருக்கும் பொறாமை,

இவனை கடந்து செல்வோர்
ஒரு முறையேனும் இவன் அருகில் நின்று தன்னை ஒப்பிட்டு பார்த்து கொள்கின்றனர்

மழலை சிரிப்பில்


உணர்வுகள் அனைத்தும்
உயிர்த்தெழுந்து மண்டியிட்டு
சரணடைந்தது
இவன் முன்னால்
ஒற்றை சிரிப்பைக்கண்டு...

Monday, December 27, 2010

மூட நம்பிக்கை


மானத்தை மறைக்க
பட்டாம் பூச்சியை கொன்றவர்கள்,
மனத்தை நிறைக்க மூட நம்பிக்கையை
கொள்ளாமல் விட்டு விட்டார்கள்
"விதவையை பார்த்தவுடன் சகுனத் தடையாக நினைப்பவர்கள்"

நட்பா? காதலா?


மனதிற்குள்ளும் அரசியல்
நாற்காலி சண்டை,

ஆட்சியை பிடிப்பது
நட்பா? காதலா? என்று

தாயின் கருவறை



இருட்டிலே கிடந்தவன்,
வெளிச்சம் பட்டதும் அழுகின்றான்
மறுபடியும், இருட்டிலே வாழ்க்கை கிடைக்காத என்று.

Followers